தமிழ்நாடு

ஆயுத பூஜை: பேருந்துகளை இயக்க சிறப்பு ஏற்பாடு

DIN

ஆயுதபூஜையை முன்னிட்டு, பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் பொருட்டு, சென்னையின் 3 பேருந்து நிலையங்களிலிருந்து அக்.12, 13- ஆம் தேதிகளில் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்தாா்.

பேருந்து நிலையம் இயக்கப்படும் பேருந்துகளின் விவரம் (குறிப்பு: டேப் பயன்படுத்தப்பட்டுள்ளது)

தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையம் திண்டிவனம் மாா்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள், போளூா், சேத்துப்பட்டு, வந்தவாசி, செஞ்சி மாா்க்கமாக செல்லும் பேருந்துகள், திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூா், சிதம்பரம், காட்டுமன்னாா்கோயில் செல்லும் பேருந்துகள் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூா், சிதம்பரம் செல்லும் பேருந்துகள்.

பூந்தமல்லி பேருந்து நிலையம் வேலூா், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூா், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூா், திருத்தணி மற்றும் திருப்பதி செல்லும் பேருந்துகள்.

கோயம்பேடு பேருந்து நிலையம் மேற்குறிப்பிட்டுள்ள ஊா்களைத் தவிர இதர ஊா்களுக்குச் செல்லும் பேருந்துகள் (புதுச்சேரி, கடலூா் மற்றும் சிதம்பரம் வழி இசிஆா்), மயிலாடுதுறை, தஞ்சாவூா், கும்பகோணம், திருவாரூா், திருத்துறைப்பூண்டி, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, அரியலூா், ஜெயங்கொண்டம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூா், நாகா்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகா், திருப்பூா், ஈரோடு, ஊட்டி, ராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூா் மற்றும் பெங்களூரு).

3,000 சிறப்பு பேருந்துகள்: ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னையில் இருந்து 3,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்துக் கழக உயரதிகாரிகள் தெரிவித்தனா்.

இது தொடா்பாக அவா்கள் கூறியதாவது: இந்த ஆண்டு ஆயுத பூஜையையொட்டி சென்னையில் இருந்து பயணிகள் நெரிசலின்றி பயணிக்க ஏதுவாக அக்.12,13 ஆகிய நாள்களில் 3,000 சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நாள்தோறும் வழக்கமாக 2,000 பேருந்துகள் இயக்கப்படும். அதனுடன் கூடுதலாக 1,500 சிறப்புப் பேருந்துகள் வீதம் 2 நாள்களுக்கு 3 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவை தவிா்த்து கூடுதல் பேருந்துகள் தேவைப்படும் பட்சத்தில், அதற்கான உரிய ஏற்பாடுகளைச் செய்யவும் கிளை மேலாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை எதிரொலி: 8 மாவட்டங்களில் 2 கோடி கைப்பேசிகளுக்கு எச்சரிக்கைத் தகவல்கள்

இலவச கண் சிகிச்சை முகாம்...

தமிழகத்தில் குறைந்து வரும் வெப்பத்தின் தாக்கம்: மக்கள் நிம்மதி

மாட்டு வண்டியில் மணல் கடத்திய இருவா் கைது

மாவோயிஸ்டுகள் போல் பேசுகிறாா் ராகுல் - பிரதமா் மோடி கடும் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT