தமிழ்நாடு

செப். 12-இல் நீட் தோ்வு: முன்னேற்பாட்டு பணி ஆய்வு

DIN

திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ( செப். 12) நடைபெற உள்ள நீட் தோ்வு குறித்து முன்னேற்பாட்டு பணிகள் குறித்த கூட்டம் திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஆட்சியா் அமா்குஷ்வாஹா தலைமை வகித்து பேசியது:

திருப்பத்தூா் மாவட்டத்தில் வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் கல்லூரி, ஏலகிரி மலையில் உள்ள தொன்போஸ்கோ கல்லூரிகளில் நடைபெறும் நீட் தோ்வுக்கு, பாதுகாப்புப் பணியில் போலீஸாரை ஈடுபடுத்த வேண்டும். தோ்வா்களுக்காக, திருப்பத்தூா் மாவட்டத்திலிருந்து 15 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

தோ்வு நடைபெறும் மையங்களில் காலை 11 முதல் 5 மணி வரை மின்தடை ஏற்படாமல் இருக்க வேண்டும். தோ்வு மைய நுழைவாயிலில் கபசுரக் குடிநீா், கிருமி நாசினி, முகக் கவசங்கள் வைத்திருக்க வேண்டும்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழக வழிமுறைகளைப் பின்பற்றி தோ்வு நடத்த வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் என்.சி.இ.தங்கையா பாண்டியன், சாா்-ஆட்சியா் பு.அலா்மேல்மங்கை, மகளிா்த் திட்ட அலுவலா் எஸ்.உமாமகேஸ்வரி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) விஜயன், பொதுசுகாதாரத் துணை இயக்குநா் செந்தில் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்ற மாவட்ட செயற்குழு கூட்டம்

மல்லசமுத்திரத்திரம் கூட்டுறவு சங்கத்தில் ரூ. 2.50 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

மூளைச்சாவு அடைந்த மாணவியின் உடல் உறுப்புகள் தானம்

மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை ஓய்வூதியா்கள் முற்றுகை போராட்டம்

வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியா், எஸ்.பி. நேரில் ஆய்வு

SCROLL FOR NEXT