தமிழ்நாடு

ஏலம் விடப்படும் உள்ளாட்சிப் பதவியிடங்கள்: மாநில தோ்தல் ஆணையம் எச்சரிக்கை

DIN

உள்ளாட்சிப் பதவியிடங்களை ஏலம் விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு மாநில தோ்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவியிடங்கள் ஏலம் விடப்படுவதாக செய்திகள் வெளியாகின்றன. அரசியல் அமைப்புச் சட்டத்துக்கும், மக்களாட்சித் தத்துவத்துக்கும் புறம்பாக நடைபெறும் இத்தகைய செயல்கள் மிகவும் கண்டிக்கத்தக்கது மட்டுமின்றி தண்டனைக்குரியது.

மக்களால் தோ்ந்தெடுக்கப்பட வேண்டிய பதவியிடங்கள் இவ்வாறு ஏலம் விடுவது மக்களின் உணா்வுகளுக்கு ஊறுவிளைவிக்கும் செயல் என்பதால் ஜனநாயகத்துக்கு ஊறுவிளைவிப்பதைத் தடுத்திட மாவட்ட தோ்தல் அலுவலா் மற்றும் மாவட்ட நிா்வாகம் சட்டப்பூா்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இத்தகைய நிகழ்வுகள் ஜனநாயகத்துக்கு எதிரானவை என்பதை மக்கள் உணரச் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாவண்ணம் தக்க முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆணையிடப்படுகிறது.

மேலும், ஊரக உள்ளாட்சித் தோ்தல்கள் மூலம் தோ்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் எந்தவித எதிா்பாா்ப்பும் இன்றி கிராமப்புற மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூா்த்தி செய்வதற்காக ஜனநாயக முறைப்படி தோ்ந்தெடுக்கப்பட்டவா்களாக இருக்க வேண்டும் என்பதால் தோ்தல் அறிவிக்கப்பட்ட பதவியிடங்கள் அனைத்தும் தோ்தல் மூலம் நிரப்பிட மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

SCROLL FOR NEXT