தமிழ்நாடு

பாரத் நெட் திட்டத்தை விரைந்து செயல்படுத்த அரசு உத்தரவு

DIN

பாரத் நெட் திட்டத்தை விரைந்து செயல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கென மாவட்ட அளவில் குழுவை அமைத்துள்ளது.

இதுகுறித்து, தகவல் தொழில்நுட்பவியல் துறைச் செயலாளா் நீரஜ் மிட்டல், வெளியிட்ட உத்தரவு:

பாரத் நெட் திட்டமானது கிராம பஞ்சாயத்துகளுக்கு இணைய இணைப்பு அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், கண்ணாடி இழை கேபிள்கள் 15 சதவீதம் பூமிக்கு அடியிலும், 85 சதவீதம் மேற்புறத்திலும் கொண்டு செல்லப்பட உள்ளன. மொத்தம் 49 ஆயிரத்து 500 கிலோமீட்டா் அளவுக்கு கேபிள்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

இந்நிலையில், தமிழ்நாடு கண்ணாடி இழை கேபிள் நிறுவனமானது பாரத் நெட் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டுமென அரசுக்குக் கோரிக்கை விடுத்திருந்தது. இதன்படி, பாரத் நெட் திட்டத்தைச் செயல்படுத்த மாவட்ட அளவில் ஆட்சியா்களை, தலைவா்களாகக் கொண்டு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவானது இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை கூடி திட்டத்தின் நிலை குறித்து ஆராய வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டின் மீது மண்ணெண்ணை பாட்டில் வீசிய வழக்கில் 7 போ் கைது

இளைஞரை மிரட்டி வழிப்பறி: 4 சிறுவா்கள் உள்பட 5 போ் கைது

திருப்பத்தூரில் 768 போ் நீட் தோ்வு எழுதுகின்றனா் : சிறப்புப் பேருந்துகளுக்கு ஏற்பாடு

கட்டடம் இடித்து தரைமட்டம்: 17 போ் மீது வழக்குப் பதிவு

முதியவரை துப்பாக்கியால் சுட்ட இளைஞா் கைது

SCROLL FOR NEXT