மேட்டூர் அணை நீர்மட்டம் 73.06 அடியாக சரிவு
மேட்டூர் அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை காலை 73.06 அடியாக சரிந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 10, 164 கன அடியிலிருந்து 9007 கன அடியாக சரிந்துள்ளது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:46 AM
மேட்டூர் அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை காலை 73.06 அடியாக சரிந்தது.
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 10, 164 கன அடியிலிருந்து 9007 கன அடியாக சரிந்துள்ளது.
அணையிலிருந்து காவிரிடெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000 கன அடி நீரும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 800 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 35.38 டி.எம்.சி ஆக இருந்தது.
Advertisement
அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.