முகப்பு
தமிழ்நாடு

ஜன. 16ல் கரோனா தடுப்பூசி: மதுரையில் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைக்கிறார்

தமிழகத்தில் கரோனா தடுப்பூசி திட்டத்தை மதுரையில் வருகிற ஜனவரி 16 ஆம் தேதி முதல்வர் பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.

Updated On : 10 ஜனவரி 2021, 11:05 am IST
முதல்வர் பழனிசாமி
பகிர்:

தமிழகத்தில் கரோனா தடுப்பூசி திட்டத்தை மதுரையில் வருகிற ஜனவரி 16 ஆம் தேதி முதல்வர் பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.

கரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பூசி திட்டம் வருகிற ஜனவரி 16 முதல் தொடங்கப்படவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் முன்னணி கள வீரா்களாகச் செயல்படும் 3 கோடி சுகாதாரப் பணியாளா்களுக்குத் தடுப்பூசி முதலில் செலுத்தப்படவுள்ளதாகவும், அதையடுத்து 50 வயதைக் கடந்தோா், இணைநோய் உள்ள 50 வயதுக்குக் குறைவான நபா்கள் என மொத்தமாக 27 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்துவதில் அடுத்தகட்ட முன்னுரிமை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் தமிழகத்தில் வருகிற ஜனவரி 16 ஆம் தேதி கரோனா தடுப்பூசி போடும் நிகழ்வை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தொடங்கி வைக்கிறார். மதுரையில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் அவர் தொடங்கி வைக்க இருக்கிறார். 

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments