ஆளுநருடன் பாஜக நிர்வாகிகள் திடீர் சந்திப்பு!
தமிழக ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகரை தமிழக பாஜக நிர்வாகிகள் சந்தித்துப் பேசியது பற்றி...
தமிழக ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகரை தமிழக பாஜக நிர்வாகிகள் சந்தித்துப் பேசியுள்ளனர்.
சென்னையில் கிண்டியில் உள்ள மக்கள் பவனில் ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகரை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று (சனிக்கிழமை) சந்தித்துப் பேசியுள்ளார். பாஜக மேலிடப் பொறுப்பாளர் அரவிந்த் மேனனும் உடன் சென்றிருந்தார்.
முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்றது முதல் தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை என்பது பற்றி ஆளுநரிடம் பேசியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Advertisement
Advertisement
அதேபோல, தமிழகத்தில் குதிரை பேரம் குற்றச்சாட்டு தொடர்பாகவும் அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்தும் புகார் மனு அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மதுரையில் வைகை ஆற்றில் ஆளுநர் ஆய்வு மேற்கொண்டதற்கு தவெக அரசும் அமைச்சர்களும் நேற்று எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
BJP Leader nainar nagendran meets TN governor RV Arlekar
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.