முருக பக்தர்களுக்கு கந்தசஷ்டி வாழ்த்துகள்- ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர்
கந்தசஷ்டி நிறைவு நாளில் முருக பக்தர்களுக்கு ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் வாழ்த்து தெரிவித்திருப்பது பற்றி...
கந்தசஷ்டி நிறைவு நாளில் முருக பக்தர்கள் அனைவருக்கும் தமிழக ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆளுநர் வெளியிட்ட வாழ்த்துச்செய்தியில்,
Advertisement
Advertisement
"சூரசம்ஹாரம் - கந்தசஷ்டி நிறைவு"
கந்தசஷ்டியின் நிறைவுநாள், முருகன் சூரபத்மனை சம்ஹாரம் செய்தவுடன், பக்தர்கள் தங்களுடைய ஆறு நாட்களாக கடைப்பிடித்த விரதத்தை நிறைவு செய்கின்றனர். திருச்செந்தூரில் கடற்கரையில் சூரசம்ஹாரம் நடைபெறும். சிக்கல் என்ற ஊரில் முருகன் சக்தியிடம் இருந்து வேல் பெறும் போது விக்ரகத்தில் இருந்து வியர்வை வடிவது ஒரு அதிசய அற்புதக் காட்சி!
ஆணவம் கன்மம் மாயை என்ற மூன்று மலங்களும் அசுரர்களாக சித்தரிக்கப்பட்டு, மற்ற அசுரர்கள் இறந்த பின்னர், இறுதியில் ஆணவம் என்பதின் வடிவாகிய சூரபத்மனை சம்ஹாரம் செய்வது என்பது ஆணவ மலத்தை நீக்குவதாகும். சம்ஹாரம் என்பது கொன்று அழிப்பதல்ல, ஒருவரின் தீயகுணங்களை நீக்கி, ஆணவத்தை ஒடுக்கி அந்த ஆத்மாவை தன்னுடன் வைத்துக் கொள்வதே சம்ஹாரம் ஆகும்.
இங்கு சூரபத்மனின் ஆணவத்தை ஒடுக்கி சேவலாக தன்னுடன் வைத்துக் கொள்கிறார் முருகப்பெருமான். நம்முடைய தீய குணங்களை நீக்கி, ஆணவத்தை விலக்கி ஆண்டவனிடம் சரணடையும் தத்துவத்தை விளக்கும் இந்த கந்தசஷ்டி நிறைவு நாளில் முருக பக்தர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!" எனத் தெரிவித்துள்ளார்.