சட்டம் - ஒழுங்கு பிரச்னை: அமித் ஷாவிடம் அறிக்கை அளித்தார் தமிழக ஆளுநர் ஆர்லேகர்!
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.பி. அர்லேகர் சந்தித்தது பற்றி...
தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இன்று காலை சந்தித்தார்.
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஆளுநர்கள் மாற்றத்தின்போது, கேரள ஆளுநராக இருந்த ஆர்.வி. ஆர்லேகர் தமிழக பொறுப்பு ஆளுநராகவும் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டார்.
Advertisement
Advertisement
அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் முழு நேர ஆளுநராக ஆர்.வி. அர்லேகர் கடந்த அக். 12 ஆம் தேதி நியமனம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவர் தமிழ்நாடு ஆளுநராக முதல் முறையாக தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை இன்று காலை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. தீபாவளிப் பண்டிகையன்று மட்டும் 8 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். அதற்கு முன்னதாக சிறைக்கைதிகள் தப்பிச்சென்றது போன்ற பிரச்சினைகளால் பெரும் பரபரப்பான சூழலில் நிலவி வருகிறது.
மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருந்து தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு குறித்தான அறிக்கை கேட்கப்பட்டிருந்ததாக தகவல் வெளியான நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து ஆளுநர் ஆர்லேகர் அறிக்கை அளித்துள்ளார்.
மேலும், இருவரும் சட்டம் - ஒழுங்கு பிரச்சினைகள் தொடர்பாக விரிவான ஆலோசனை நடத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.