FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ராகுலின் வெளிநாட்டுப் பயணங்கள் பற்றி தெரிந்துகொள்ள..! - அமித் ஷா தாக்கு!

ராகுல் காந்தியின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கேள்வி எழுப்பியுள்ளார்...

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா - ANI
பகிர்:

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து தெரிந்துகொள்ள மக்களுக்கு உரிமையுண்டு என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

ஹரியாணாவின் கர்னலில் இன்று (நவ. 5) நடைபெற்ற பாஜக பேரணியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டார். அப்போது, ராகுல் காந்தியின் வெளிநாட்டுப் பயணங்களின் விவரங்கள் வெளியிடப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

இதுபற்றி, அவர் பேசியதாவது:

Advertisement

Advertisement

“நீங்கள் (ராகுல்) இப்போதுதான் வியத்நாமில் இருந்து திரும்பி வந்தீர்கள். ஆனால், அதைப் பற்றி எதுவும் பேசவில்லை. ராகுல் அவர்களே உங்களின் அனைத்து வெளிநாட்டுப் பயணங்கள் குறித்தும் மக்களிடம் விளக்கம் கூறுங்கள். வியத்நாமில் எத்தனை நாள்கள் தங்கினீர்கள், யாரையெல்லாம் சந்தித்தீர்கள் எதற்காகச் சென்றீர்கள் அங்கு என்னென்ன நிகழ்ச்சிகள் நடந்தன என்பது குறித்து கூறுங்கள்.

நீங்கள்தான் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் என்பதால் இதுபற்றி தெரிந்துகொள்ள மக்களுக்கு உரிமையுண்டு” எனக் கூறியுள்ளார்.

இத்துடன், வாக்குப் பதிவு இயந்திரங்கள் குறித்து ராகுல் காந்தி விமர்சித்து வரும் நிலையில், அதே வாக்குப் பதிவு இயந்திரங்கள் மூலம் கேரளத்தின் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றதும் எதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் பதவியேற்றார்கள் என அமித் ஷா கேள்வி எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

Amit Shah has stated that the public has a right to know about the foreign trips of the LOP Lok Sabha, Rahul Gandhi.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.