தமிழகத்தில் புதிதாக 1,745 பேருக்கு கரோனா
தமிழகத்தில் புதிதாக 1,745 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புதிதாக 1,745 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் அதிகபட்சமாக கோவையில் 226 பேருக்கும், சென்னையில் 222 பேருக்கும், ஈரோட்டில் 116 பேருக்கும், செங்கல்பட்டில் 107 பேருக்கும் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடகத்திலிருந்து தமிழகம் வந்த ஒருவருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | கேரளத்தில் புதிதாக 19,682 பேருக்கு கரோனா
Advertisement
Advertisement
இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 26,52,115 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 1,624 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 27 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 25,99,567 பேர் குணமடைந்துள்ளனர். பலி எண்ணிக்கை 35,427 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 1,60,057 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இன்றைய நிலவரப்படி 17,121 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.