வெனிசுவேலா நிலநடுக்கம்! மீட்புப் படைகளை அனுப்பும் அமெரிக்கா!
வெனிசுவேலாவில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக அமெரிக்கா மீட்புப் படைகளை அனுப்புவது குறித்து...
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள வெனிசுவேலா நாட்டில், மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக மீட்புப் படைகளை அனுப்பவுள்ளதாக, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
வெனிசுவேலாவில் இன்று (ஜூன் 25) காலை அடுத்தடுத்து ஏற்பட்ட 2 நிலநடுக்கங்களால் இதுவரை 164 பேர் பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், சுமார் 1,000-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கான கட்டடங்கள் இடிந்து தரைமட்டமானதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள வெனிசுவேலா நாட்டுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகளைச் செய்ய கத்தார், எல் சால்வேடார் மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் முன்வந்துள்ளன.
Advertisement
Advertisement
இந்த நிலையில், வெனிசுவேலாவில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள அமெரிக்க அரசு மீட்புப் படைகளைக் களமிறக்குவதாக, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
இதுபற்றி, பஹ்ரைனில் செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது:
“விர்ஜீனியா, லாஸ் ஏஞ்சலீஸ் உள்ளிட்ட நகரங்களைச் சேர்ந்த மீட்புப் படைகளை நாங்கள் களமிறக்கியுள்ளோம். விரைவில் மேலும் சிலரையும் நாங்கள் சேர்ப்போம். நாங்கள் ஒட்டுமொத்த அரசையும் உள்ளடக்கிய ஒரு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம். அவை பெரியதாகவும், விரைவானதாகவும், திறந்தவாய்ந்தவையாகவும் இருக்கும் ” எனக் கூறியுள்ளார்.
இத்துடன், வெனிசுவேலாவின் விமான நிலையம் மிகவும் சேதமடைந்துள்ள நிலையில் அதனை சீரமைக்கத் தேவையான உதவிகளை அமெரிக்க அரசு மேற்கொள்ளும் எனவும் அடுத்த 48 முதல் 72 மணிநேரங்களுக்கு உடனடியாகத் தேவைப்படும் உதவிகள் அனைத்தும் விரைவாக அனுப்பப்படும் எனவும் ரூபியோ தெரிவித்துள்ளார்.
Marco Rubio has announced that rescue teams will be sent to earthquake-hit Venezuela to carry out rescue operations.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.