பிரதமர் மோடியுடன் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் சந்திப்பு!
பிரதமர் மோடியுடன் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ சந்திப்பு...
பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ 4 நாள் அரசு முறைப் பயணமாக சனிக்கிழமை (மே 23) காலை இந்தியாவின் கொல்கத்தா நகரத்துக்கு வந்துள்ளார்.
கொல்கத்தாவில் இயங்கி வரும் மறைந்த அன்னை தெரேசாவின் ஆதரவு இல்லங்களின் தலைமையிடமான மதர் ஹவுஸுக்கு நேரில் சென்ற அமைச்சர் ரூபியோ அங்குள்ள அதிகாரிகளுடன் உரையாடினார்.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து, புது தில்லிக்குச் சென்ற அமைச்சர் ரூபியோ பிரதமர் மோடியை நேரில் சந்தித்து உரையாடியுள்ளார். இந்தச் சந்திப்பில், இருநாடுகளுக்கு இடையேயான உறவுகள் குறித்த முக்கிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன், விரைவில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு வருகை தருமாறு பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சார்பில் அமைச்சர் ரூபியோ அழைப்பு விடுத்துள்ளார்.
இதையடுத்து, முதல்முறையாக இந்தியா வந்துள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரூபியோ ஜெய்ப்பூர் மற்றும் ஆக்ரா ஆகிய நகரங்களுக்கும் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
முன்னாள் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டனுக்குப் பிறகு அந்தப் பதவி வகிக்கும் ஒருவர் கொல்கத்தா வருகை தந்தது 14 ஆண்டுகளில் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
US Secretary of State Marco Rubio met with PM Modi in person and held discussions.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.