தமிழ்நாடு

பரந்தூர் விமான நிலையம்: சர்வதேச ஒப்பந்தப்புள்ளி கோரியது தமிழக அரசு 

DIN

பரந்தூரில் விமான நிலையம் அமைக்க தமிழக அரசு, சர்வதேச ஒப்பந்தப்புள்ளியை கோரியுள்ளது. 

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் ரூ.20,000 கோடி முதலீட்டில் 2028-ம் ஆண்டுக்குள் விமான நிலையம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 4,700 ஏக்கர் பரப்பளவில் புதிய விமான நிலையத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னையின் 2-வது விமான நிலையமாக பரந்தூரில் விமான நிலையம் அமைக்க ஆரம்ப கட்டப் பணிகள் தொடங்கியுள்ளன. இந்நிலையில், பரந்தூரில் விமான நிலையம் அமைக்க தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம், சர்வதேச ஒப்பந்தப்புள்ளி(டெண்டர்) கோரியுள்ளது. 

பரந்தூர் விமான நிலையம் - சென்னை விமான நிலையம் இடையே சாலை, ரயில் இணைப்பு போக்குவரத்து தேவைகளை ஆராய வேண்டும், விமான போக்குவரத்தின் வளர்ச்சி நிலைகளை ஆய்வு செய்ய வேண்டும், 2069-70 ஆம் நிதியாண்டு வரை போக்குவரத்தின் கணிப்புகள் இடம்பெற வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐடிஐயில் மாணவா் சோ்க்கை: ஆன்லைனில் விண்ணப்பிக்க உதவி மையங்கள்

தூத்துக்குடி அருகே வீட்டின் கதவை உடைத்து பணம் திருட்டு

மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் வாகன போக்குவரத்து மீண்டும் தொடக்கம்

தேங்காய்ப்பட்டினம் கடற்கரையில் மீனவா் உயிரிழப்பு

கடையநல்லூரில் இருதரப்பினரிடையே மோதல்

SCROLL FOR NEXT