FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

திமுக முன்னாள் எம்.பி மஸ்தான் காலமானார்!

திமுக முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் மஸ்தான் உடல்நலக் குறைவால் வியாழக்கிழமை காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

1 பிப்ரவரி 2024, 4:40 pm IST
பகிர்:


திமுக முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் மஸ்தான் உடல்நலக் குறைவால் வியாழக்கிழமை காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

மறைந்த மஸ்தான் 1995 ஆம் ஆண்டு அதிமுகவில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டு 2001 ஆம் ஆண்டு வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். 

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திமுகவில் இணைந்தார். பின்னர் அவருக்கு திமுகவில் சிறுபான்மை நல உரிமை பிரிவு செயலாளராக பொறுப்பு வழங்கப்பட்டது. தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய துணைத்தலைவராக இருந்தார். 

Advertisement

Advertisement

இந்நிலையில், வியாழக்கிழமை காலை காரில் ஊரப்பாக்கம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு இறந்தார். 

மஸ்தான் மறைவுக்கு அரசியல் கட்சியினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments