முகப்பு
தமிழ்நாடு

அவிநாசி அருகே சாலை தடுப்பில் கார் மோதி விபத்து: ஐயப்ப பக்தர் பலி

அவிநாசி அருகே பழங்கரையில் சாலை தடுப்பில் கார் மோதி விபத்துக்கொள்ளானதில் கோவை சேர்ந்த ஐயப்ப பக்தர் திங்கள்கிழமை அதிகாலை பலியானார். 

Updated On : 26 டிசம்பர் 2022, 8:49 am IST
டயர் வெடித்து விபத்துக்குள்ளான கார்
பகிர்:

அவிநாசி: அவிநாசி அருகே பழங்கரையில் சாலை தடுப்பில் கார் மோதி விபத்துக்கொள்ளானதில் கோவை சேர்ந்த ஐயப்ப பக்தர் திங்கள்கிழமை அதிகாலை பலியானார். 

கோவை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 4 பேர் பவானி சங்கமேஸ்வரர் கோயிலுக்கு சென்றுள்ளனர். திங்கள்கிழமை அதிகாலை பவானியில் இருந்து புறப்பட்டு காரில் கோவை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அவிநாசி அருகே பழங்கரை புறவழிச் சாலை வரும்போது எதிர்பாராத விதமாக கார் சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயமடைந்த கோவை ஆவாரம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் மோகன்( 37) என்பவர் இறந்தார். 

மேலும், பலத்த காயமடைந்த 3 பேர் அவிநாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இது குறித்து அவிநாசி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments