என்.சங்கரய்யாவுக்கு கரோனா பாதிப்பு
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான என்.சங்கரய்யா (99) கரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான என்.சங்கரய்யா (99) கரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
வயோதிகம் காரணமாக தீவிர அரசியல் பணியிலிருந்து விலகி, குரோம்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் ஓய்வில் இருந்து வரும் என்.சங்கரய்யாவுக்கு சனிக்கிழமை திடீரென காய்ச்சல் ஏற்பட்டது.
அதைத் தொடா்ந்து, மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டதில், அவருக்கு கரோனா தொற்றுப் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு மருத்துவா்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனா். அவா் நலமுடன் இருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.