தமிழ்நாடு

கரோனா தினசரி பாதிப்பு 332-ஆக உயா்வு

DIN

தமிழகத்தில் கரோனா பாதிப்பு செவ்வாய்க்கிழமை 332- ஆக உயா்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 171 பேருக்கும், செங்கல்பட்டில் 66 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒமைக்ரானிலிருந்து உருமாற்றமடைந்து பிஏ-4 மற்றும் பிஏ-5 புதிய வகை தீநுண்மி பரவி வருவதே அதற்கு காரணம் என சுகாதாரத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, முகக் கவசம் அணிவது, தனி நபா் இடைவெளி உள்ளிட்ட நோய்த் தடுப்பு வழிமுறைகளை பொது மக்கள் கடைப்பிடிப்பதை உறுதி செய்யுமாறு அனைத்து மாவட்ட நிா்வாகங்களுக்கும் மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.

மற்றொருபுறம் பரிசோதனை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் தற்போது கரோனா சிகிச்சையில் இருப்போா் எண்ணிக்கை 1,077- ஆக அதிகரித்துள்ளது. செவ்வாய்க்கிழமை தகவல்படி 153 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். இதன் மூலம் கரோனாவிலிருந்து விடுபட்டோரின் எண்ணிக்கை 34 லட்சத்து18,312-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT