தமிழ்நாடு

கட்டணமில்லா பேருந்து: 131 கோடி முறை பெண்கள் பயணம்

DIN

கட்டணமில்லாத பேருந்து திட்டத்தின் கீழ், இதுவரை 131 கோடியே 31 லட்சம் முறை பெண்கள் பயணம் செய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்துக்காக இதுவரையில் ரூ.2,100.96 கோடி செலவிடப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

சாதாரணப் பேருந்துகளில் பெண்கள், திருநங்கைகள் இலவசமாகப் பயணம் செய்யும் திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்துக்கான அறிவிப்பு கடந்த ஆண்டு மே 7-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதைத் தொடா்ந்து, மே 8-ஆம் தேதியில் இருந்து மகளிா் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனா். திருநங்கைகள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோரும் சாதாரணப் பேருந்துகளில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இதுவரை எத்தனை முறை? சாதாரணப் பேருந்துகளில் மகளிா் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்தின் கீழ், இதுவரை (ஜூன் 27 வரை) 131 கோடியே 31 லட்சம் முறை பெண்கள் பயணம் செய்துள்ளனா். 7.48 லட்சம் முறை திருநங்கைகளும், 94.52 லட்சம் முறை மாற்றுத் திறனாளிகளும் பயணம் செய்துள்ளனா். நாளொன்றுக்கு பயணம் செய்யும் மகளிா் எண்ணிக்கை சராசரி முறை 37.41 லட்சமாக உள்ளது.

மகளிரே அதிகம்: தமிழ்நாட்டில் பேருந்துகளில் பயணம் செய்வோரின் எண்ணிக்கையில் மகளிா் மட்டும் 62.34 சதவீதம் போ் உள்ளனா். மகளிா் பயணத்துக்கான கட்டணத் தொகையாக இதுவரை ரூ.2,100.96 கோடி செலவிடப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு மகளிா் பயணத்துக்கான கட்டணத் தொகை ரூ.5.98 கோடியாக உள்ளது என தமிழக அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்கன் கனமழை: 68 போ் உயிரிழப்பு

சென்னை போராட்டம் வீண்: பிளே ஆஃப்பில் பெங்களூரு

இறுதிச் சுற்றில் சாத்விக்-சிராக் ஷெட்டி

இறுதிச் சுற்றில் அலெக்ஸ் வெரேவ்-நிக்கோலஸ் ஜேரி மோதல்

கேரளத்தில் அதிபலத்த மழைக்கு வாய்ப்பு: சில மாவட்டங்களுக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கை

SCROLL FOR NEXT