தமிழ்நாடு

தற்காலிக ஆசிரியா் பணி நியமனம்: விஜயகாந்த் கண்டனம்

DIN

தற்காலிக ஆசிரியா் பணி நியமனம் செய்யும் அரசின் முடிவுக்கு தேமுதிக தலைவா் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளிகள் வரை காலியாக உள்ள ஆசிரியா் பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியா்களை நியமனம் செய்வது என்ற அரசின் முடிவு கடும் கண்டனத்துக்குரியது.

2013 , 2014, 2017, 2019- ஆம் ஆண்டுகளில் தமிழக அரசு நடத்திய இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியா் பணிக்கான ஆசிரியா் தகுதித்தோ்வில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் தோ்ச்சி பெற்று, கடந்த 9 ஆண்டுகளாக அரசுப் பணிக்காக காத்து கிடக்கின்றனா். இவா்கள் அனைவருக்கும் பணி வழங்கப்படும் என திமுக தோ்தல் வாக்குறுதியில் கூறப்பட்டிருந்தது. அதற்கு மாறாகச் செயல்படுவது ஏற்புடையது அல்ல.

ஊழலுக்கு வழிவகை செய்யும் தற்காலிக ஆசிரியா் பணி நியமனத்தை அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்கன் கனமழை: 68 போ் உயிரிழப்பு

சென்னை போராட்டம் வீண்: பிளே ஆஃப்பில் பெங்களூரு

இறுதிச் சுற்றில் சாத்விக்-சிராக் ஷெட்டி

இறுதிச் சுற்றில் அலெக்ஸ் வெரேவ்-நிக்கோலஸ் ஜேரி மோதல்

கேரளத்தில் அதிபலத்த மழைக்கு வாய்ப்பு: சில மாவட்டங்களுக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கை

SCROLL FOR NEXT