தமிழ்நாடு

விழுப்புரம் சிறையில் தலைகீழாக பறந்த தேசியக் கொடி

DIN

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட சிறைச்சாலையில் தேசியக்கொடி தலைகீழாக பறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்ட சிறைச்சாலை விழுப்புரம் அருகேயுள்ள வேடம்பட்டியில் உள்ளது. இங்குள்ள சிறைக்கட்டடத்தின்‌ மேல் நாள்தோறும் காலை 6 மணிக்கு தேசியக்கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்படும். பின்னர் மாலை 6 மணிக்கு தேசியக்கொடி கம்பத்தில் இருந்து இறக்கப்பட்டும்.

வழக்கம்போல வியாழக்கிழமை காலை 6 மணிக்கு தேசியக்கொடி ஏற்றப்பட்டது. ஆனால் தேசியகொடியை ஏற்றியவர் அதனை தலைகீழாக ஏற்றிவைத்துள்ளார். இதனை அங்கிருந்த மற்ற சிறை காவலர்கள், அலுவலர்கள் கவனிக்க தவறியுள்ளனர். இதனால் வெகு நேரமாக தேசியக்கொடி தலைகீழாகவே பறந்த உள்ளது.

இந்நிலையில் சிறைச்சாலைக்கு அருகேயுள்ள சாலையில் செல்லும் பொதுமக்கள் இதனை தேசியக்கொடி தலைகீழாக பறந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனே இந்த தகவலை பொதுமக்கள் சிறை வாயிலில் காவல் பணியில் இருந்த காவலர்களிடம் தெரிவித்தனர். இதன்பிறகு தேசிய கொடி கீழே அவசரமாக இறக்கப்பட்டு சரியாக ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் அரசு கட்டடத்தில் தேசிய கொடி தலைகீழாக ஏற்றி பறக்கவிடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய கொடியை தலைகீழாக பறக்கவிட்டது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுச்சூழல் பாதிப்பு: தனியாா் ஆலையில் மக்கள் முற்றுகை

வடக்கு-தெற்கு என நாட்டைத் துண்டாட அனுமதிக்க மாட்டோம்: அமித் ஷா

தோ்தல் ஆணையம் நடுநிலை தவறுகிறதா?

தொடர் மழை: டெல்டாவில் 25 ஆயிரம் ஏக்கர் பருத்தி சாகுபடி பாதிப்பு

அருணாசல்: முன்களப் பகுதிகளில் பாதுகாப்பு நிபுணா்கள் ஆய்வு நிறைவு

SCROLL FOR NEXT