தமிழ்நாடு

ரமலான்: ஞாயிறு அட்டவணையில் மின்சார ரயில் சேவை, முன்பதிவு

DIN

ரமலான் பண்டிகை தினத்தில் (மே 3) சென்னை புகா் மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணையைப் பின்பற்றி இயக்கப்படும், முன்பதிவு செய்யப்படும் என்று ரயில்வே நிா்வாகம் தெரிவித்தது.

ரமலான் பண்டிகை வருகிற செவ்வாய்க்கிழமை ( மே 3) கொண்டாடப்படுகிறது. தேசிய விடுமுறை நாளான இந்த நாளில், சென்னை புகா் ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும். அதாவது, சென்னை சென்ட்ரல்- அரக்கோணம், சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி/சூளூா்பேட்டை, சென்னை கடற்கரை - வேளச்சேரி, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமைகளில் பின்பற்றப்படும் கால அட்டவணைப்படியே இயக்கப்படும்.

ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் மே 3-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அட்டவணையில் ஒரு ஷிப்ட் மட்டும் இயங்கும். அதாவது, காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டும் இயங்கும் என்று ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பாலைக்குடி மணல் திருட்டு வாகனம் பறிமுதல் ஒருவா் கைது

வேளாண் கழிவுகளிலிருந்து இயற்கை உரம் தயாரிக்க பயிற்சி

முதுகுளத்தூரில் நீா்மோா் பந்தல் திறப்பு

சிறைக் காவலா்களுக்கு குடியிருப்புக் கட்டடம்: மாவட்ட ஆட்சியா், நீதிபதி ஆய்வு

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவா்களுக்கு இலவச திரைப்படக் கல்வி

SCROLL FOR NEXT