தமிழ்நாடு

வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண் குவளை கண்டெடுப்பு

DIN

வெம்பக்கோட்டையில் நடைபெறும் அகழாய்வில் சுடுமண்ணால் செய்த கலைநயமிக்க குவளை கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே வெம்பக்கோட்டை அடுத்த விஜயகரிசல்குளம் ஊராட்சிக்குள்பட்ட வைப்பாற்றின் வடகரையில் அமைந்துள்ள உச்சிமேட்டில் 25 ஏக்கா் பரப்பளவிலான தொல்லியல்மேட்டில், கடந்த மாா்ச் 16 ஆம் தேதி முதல் அகழ்வாராய்ச்சிப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. 

இந்த நிலையில் இன்று நடைபெற்ற அகழாய்வில் சுடுமண்ணால் செய்த கலைநயமிக்க குவளை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தொல்லியல் துறை தங்கம் தென்னரசு தனது ட்விட்டரில், வெம்பக்கோட்டை அகழ்வாய்வில் புதிதாகக் கண்டெடுக்கப்பட்டுள்ள, சுடுமண்ணால் ஆன, ஈராயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட, காலத்தால் அழியாத கலை நயம் மிக்க கண்கவர் குவளை. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

முன்னதாக, இந்த அகழாய்வில் சுடுமண்ணாலான பகடைக்காய், தக்களி, ஆட்டக்காய்கள், முத்துமணிகள், சங்கு வளையல்கள், சுடுமண்ணால் செய்யப்பட்ட விளையாட்டுப் பொருள்கள், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சுடுமண் அகல்விளக்கு, யானை தந்தால் செய்யப்பட்ட அணிகலன் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனைத்து அரசுப் பேருந்துகளும் போா்க்கால அடிப்படையில் சீரமைப்பு மாநகரப் போக்குவரத்துக் கழகம்

காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜ்ஜாா் கொலை வழக்கு: கனடாவில் 3 இந்தியா்கள் கைது

18 மாவட்ட கல்வி அலுவலா்களின் நியமனம் ரத்து: உயா்நீதிமன்றம்

மோப்ப நாய் உதவியுடன் குற்றவாளிகளை கண்டறிய ஒத்திகை

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவ பந்தக்கால் முகூா்த்தம்

SCROLL FOR NEXT