கும்மிடிப்பூண்டி பள்ளி மாணவன் சக்கராசனத்தில் உலக சாதனை!
கும்மிடிப்பூண்டி பகுதி பள்ளி மாணவன், சக்கராசனத்தில் நின்றபடி, ஒரு நிமிடத்தில் 78 முறை தண்டால் எடுத்து உலக சாதனை படைத்தார்.
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி பகுதி பள்ளி மாணவன், சக்கராசனத்தில் நின்றபடி, ஒரு நிமிடத்தில் 78 முறை தண்டால் எடுத்து உலக சாதனை படைத்தார்.
கும்மிடிப்பூண்டி பகுதியைச் சேர்ந்த புண்ணியக்கோடி - கிரிஜா தம்பதியரின் மகன் டி.பி.ஷர்வின்குமார்(11). இவர் கும்மிடிப்பூண்டி ஸ்ரீ கலைமகள் வித்யாமந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், 6 ஆம் வகுப்பு பயின்று வருகிறார்.
அதேபகுதியில் இயங்கி வரும் ஸ்ரீ சங்கரி யோகா பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் யோகாசன பயிற்சி பெற்று வருகிறார். இவர், சக்கராசனத்தில் நின்றபடி, ஒரு கையை தரையில் வைத்து, ஒரு நிமிடத்தில், 78 முறை தலையால் தரையை தொட்டு, தண்டால் எடுத்து உலக சாதனை படைத்தார்.
Advertisement
இவரது சாதனை, ‛இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட்’, ‛வேல்ட் வைட் புக் ஆப் ரெக்கார்ட்’, ‛அசிஸ்ட் உலக சாதனை’ஆகிய மூன்று உலக சாதனை புத்தகங்களில் இடம் பிடித்தன.
சாதனை படைத்த ஷர்வின்குமார், அவருக்கு யோகா பயிற்சி அளித்த யோகா ஆசிரியர் சந்தியா ஆகியோருக்கு பாராட்டு குவிகிறது.
இதையும் படிக்க | அறிவியல் ஆயிரம்: புற்றுநோய்க்குக் காரணமாகும் வைட்டமின் மாத்திரை!