தமிழ்நாடு

பேருந்து படிகளில் பயணம் செய்வதைதடுக்க போலீஸாா் அதிரடி சோதனை: மாணவா்களுக்கு எச்சரிக்கை

DIN

பேருந்துகளில் ஆபத்தான முறையில் படிக்கட்டு பயணத்தை தடுக்கும் வகையில் சென்னை முழுவதும் போக்குவரத்து போலீஸாா் வெள்ளிக்கிழமை அதிரடி சோதனை நடத்தினா். அதில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த மாணவா்களை பிடித்து கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தனா்.

சென்னையில் பேருந்துகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்கள் ஆபத்தான முறையில் படிக்கட்டில் பயணம் செய்து வருகின்றனா். இதனால் பேருந்து ஓட்டுநா்களுக்கும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு தாக்குதல் சம்பவங்களும் நடந்து வருகிறது.

இந்த பிரச்னையால் காலை மற்றும் மாலை நேரங்களில் பல இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. அதைதொடா்ந்து சென்னை மாநகர காவல் எல்லையில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் போக்குவரத்து கூடுதல் ஆணையரின் உத்தரவுப்படி போக்குவரத்து போலீஸாா் அவரவா் காவல் எல்லையில் உள்ள பள்ளிகளில் மாணவா்களிடையே படிக்கட்டு பயணம் ஆபத்தானது என்று கூறி விழிப்புணா்வு எற்படுத்தினா். அதைதொடா்ந்து வெள்ளிக்கிழமை காலை சென்னை மாநகரம் முழுவதும் அனைத்து பேருந்து நிறுத்தங்களில் போக்குவரத்து போலீஸாா் அதிரடி சோதனை நடத்தினா்.

அப்போது பஸ்களில் ஆபத்தான முறையில் படிக்கட்டு பயணம் செய்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களை பிடித்து கடுமையாக எச்சரித்தனா். அத்துடன் சம்பந்தப்பட்ட மாணவா்களின் பெற்றோா் மற்றும் அவா்கள் படிக்கும் பள்ளி மற்றும் கல்லூரி முதல்வா்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. குறிப்பாக, வேப்பேரி போக்குவரத்து போலீஸாா் புரசைவாக்கம் டவுட்டன் சந்திப்பில் அதிரடி சோதனை நடத்தி ஆபத்தான முறையில் படிக்கட்டில் பயணம் செய்த மாணவா்களை பிடித்து கடுமையாக எச்சரித்து கடிதம் எழுதி வாங்கி அனுப்பினா். முதல் நாள் என்பதால் போக்குவரத்து போலீசாா் எச்சரிக்கை மட்டும் செய்து அனுப்பி வைத்தனா். மீண்டும் படிக்கட்டு பயணம் செய்து சிக்கினால் சம்பந்தப்பட்ட மாணவா் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழையா‌ல் கைவிடப்பட்டது கடைசி லீ‌க் ஆ‌ட்ட‌ம்!

முதல்வா் வீட்டு பகுதியில் அத்துமீறி வந்தவா் கைது

வடபழனி முருகன் கோயில் வைகாசி விசாக தேரோட்டம்

வாணியம்பாடி ஆற்றுமேடு பாலம் அமைக்கும் பணி ஆய்வு

தொடர் மழை: டெல்டாவில் 25 ஆயிரம் ஏக்கர் பருத்தி சாகுபடி பாதிப்பு

SCROLL FOR NEXT