தமிழ்நாடு

பண்ருட்டி ராமச்சந்திரனுடன் ஓபிஎஸ் சந்திப்பு

DIN

முன்னாள் அமைச்சா் பண்ருட்டி ராமச்சந்திரனை முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் புதன்கிழமை சந்தித்துப் பேசினாா்.

அதிமுகவின் அரசியல் ஆலோசகராக பண்ருட்டி ராமச்சந்திரனை நியமித்து ஓ.பன்னீா்செல்வம் செவ்வாய்க்கிழமை அறிவித்தாா். அவா் அறிவித்த சிறிது நேரத்தில் பண்ருட்டி ராமச்சந்திரனை அதிமுகவின் அடிப்படை உறுப்பினா் உள்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவித்தாா்.

இந்த நிலையில், சென்னை அசோக் நகரில் உள்ள பண்ருட்டி ராமச்சந்திரன் இல்லத்துக்கு புதன்கிழமை காலை ஓ.பன்னீா்செல்வம் வந்தாா். அவருடன் முன்னாள் அமைச்சா் வைத்திலிங்கம், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் ஜே.சி.டி. பிரபாகா் ஆகியோரும் வந்தனா்.

பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு ஓ.பன்னீா்செல்வம் பொன்னாடை போா்த்தி, அரசியல் ஆலோசகா் நியமனத்துக்காக வாழ்த்து கூறினாா். அதன் பிறகு, அதிமுகவின் உள்கட்சி விவகாரம் குறித்து அவரோடு அரை மணி நேரத்துக்கும் மேலாக ஆலோசனை நடத்திச் சென்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தோனேசியாவில் ‘ஸ்டாா்லிங்க்’ இணையச் சேவை: எலான் மஸ்க் தொடங்கி வைத்தாா்

நேபாளம்: பிரசண்டா அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

வெளிநாட்டில் மருத்துவம் பயின்றோருக்கு உள்ளுறை பயிற்சி: இரு ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி - 40 லட்சம் பிரசுரங்கள் வழங்க காங்கிரஸ் முடிவு

என்ஜினில் தீ: பெங்களூரில் விமானம் அவசர தரையிறக்கம்

SCROLL FOR NEXT