மேட்டூர் அணை நீர்மட்டம் 104.99 அடியாக உயர்வு
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று புதன்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, 104.99 அடியாக உயர்ந்துள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று புதன்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, 104.99 அடியாக உயர்ந்துள்ளது.
காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று புதனிகிழமை காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 3610 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து வருவதால் நேற்று காலை 104.88 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 104.99 அடியாக உயர்ந்துள்ளது.
நீர் இருப்பு 71.45 டிஎம்சியாக உள்ளது.
Advertisement
Advertisement
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2973 அடியிலிருந்து 3610 கன அடியாக அதிகரித்து உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க | ஜிஎஸ்டி உயா்கிறதா? நிதியமைச்சா் விளக்கம்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.