'திரைப்பட வாழ்க்கை முடிந்துவிட்டது என சொல்கிறீர்களா': விஷாலிடம் நீதிமன்றம் அதிரடி!
நடிகர் விஷாலின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: நடிகர் விஷாலின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லைகா நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய ரூ.21 கோடி கடனை செலுத்தாதது தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தயாரிப்பாளர் அன்புச்செழியனிடம் விஷால் பெற்ற ரூ.21.29 கோடி கடனை லைகா நிறுவனம் செலுத்தியது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. ஒரே நாளில் ரூ.18 கோடி நஷ்டம் ஆன நிலையில், 6 மாதங்கள் ஆனாலும் பணத்தை செலுத்த முடியாது என விஷால் தரப்பு வாதம் செய்ததது.
Advertisement
Advertisement
திரைப்பட வாழ்க்கை முடிந்துவிட்டது என சொல்கிறீர்களா என ஆஜரான விஷாலிடம் நீதிபதி செந்தில் ராமமூர்த்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிக்க: வீரமாமுனிவர் வரலாறு: வளர்ந்து நிலவும் குழப்பங்கள்!
இவ்வழக்கின் விசாரணை செப்டம்பர் 9 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், அன்றைய தினமும் விஷால் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.