முகப்பு
செய்திகள்

என்னுடைய அப்பாவை நினைத்து பெருமைப்படுகிறேன்! - ஹபீபி படத்தைப் பாராட்டிய தனுஷ்!

தனது தந்தை கஸ்தூரி ராஜா நடித்துள்ள ஹபீபி படத்தை நடிகர் தனுஷ் பாராட்டியுள்ளது குறித்து...

Updated On : 19 ஜூன் 2026, 4:51 pm IST
ஹபீபி படக்குழுவுக்கு நடிகர் தனுஷ் பாராட்டு... - கோப்புப் படம்
பகிர்:

பழம்பெரும் இயக்குநர் கஸ்தூரி ராஜா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்த “ஹபீபி” திரைப்படத்தை நடிகர் தனுஷ் பாராட்டியுள்ளார்.

அவள் பெயர் தமிழரசி, விழித்திரு ஆகிய படங்களின் இயக்குநர் மீரா கதிரவன் இயக்கத்தில் இயக்குநர் கஸ்தூரி ராஜா, ஈசா, மாளவிகா மனோஜ் ஆகியோரின் நடிப்பில் உருவாகிய படம் “ஹபீபி”.

கடையநல்லூரில் வாழும் தமிழ் முஸ்லீம்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.

Advertisement

Advertisement

இந்தப் படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகனும், தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகருமான தனுஷ் இன்று (ஜூன் 19) ஹபீபி படக்குழுவிற்குத் தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி, அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,

“தொடர்ச்சியான படப்பிடிப்பு காரணமாக ஹபீபி திரைப்படத்தை தாமதமாகத்தான் இன்று தான் பார்த்தேன். தான் அறிந்திடாத முற்றிலும் புதிய உலகத்திற்குள் நுழைந்து "யூசுப்" கேரக்டராகவே முழுமையாக வாழ்ந்திருக்கும் என்னுடைய அப்பாவை நினைத்து பெருமைப்படுகிறேன்.

அப்பாவிடமிருந்தும் மற்ற நடிகர்கள் அனைவரிடமிருந்தும் மிகச்சிறப்பான நடிப்பை வாங்கியதோடு மிக சிறந்த திரைப்பட அனுபவத்தைத் தந்திருக்கும் இயக்குநர் மீரா கதிரவன் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள்” எனக் கூறியுள்ளார்.

summary

Actor Dhanush has praised the film “Habeebi” in which director Kasthuri Raja plays the lead role.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments