முகப்பு
இந்தியா

போராட்டத்தை இணைந்து முன்னெடுப்போம்- மு.க. ஸ்டாலின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த ராகுல்!

தனக்குப் பிறந்தநாள் வாழ்த்துக் கூறிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார்.

Updated On : 19 ஜூன் 2026, 5:14 pm IST
ராகுல் காந்தி / மு.க. ஸ்டாலின் - கோப்புப் படங்கள்
பகிர்:

தனக்குப் பிறந்த நாள் வாழ்த்துக் கூறிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார்.

அதில், அரசமைப்பு மற்றும் கூட்டாட்சித் தத்துவத்தை காப்பதற்கான நமது கூட்டு உறுதிப்பாடு நம்மைத் தொடர்ந்து வழிநடத்தும். இது நமது ஜனநாயகத்தின் ஆன்மாவிற்கான போராட்டம், இதில் நாம் வெற்றி பெறும் வரை ஒன்றிணைந்து போராடுவோம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், "எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். நல்ல உடல்நலத்துடனும் மகிழ்ச்சியுடனும் வாழ வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

இதேபோல் பிறந்த நாள் வாழ்த்துக் கூறிய கனிமொழிக்கும் ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார்.

summary

Rahul Gandhi has thanked DMK leader M.K. Stalin for wishing him a happy birthday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments