தமிழகத்தில் புதிதாக 3,592 பேருக்கு கரோனா தொற்று
தமிழகத்தில் புதிதாக 3,592 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (வியாழக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புதிதாக 3,592 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (வியாழக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் குறித்த தரவுகளை மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. 1,10,346 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் 3,592 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் 14,182 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க | 3 மொழிகளில் வெளியானது வலிமை பட டிரைலர்
இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 34,28,068 ஆக உயர்ந்துள்ளது. இதில் 33,23,214 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 37,862 ஆக உயர்ந்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.