முகப்பு
தமிழ்நாடு

பொதுத் தேர்வு எழுதாத 6.79 லட்சம் மாணவர்களுக்கு துணைத்தேர்வு

தமிழகத்தில் பொதுத் தேர்வுகள் எழுதாத 6.79 லட்சம் மாணவர்கள் துணைத் தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கக் கோரி முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

Updated On : 2 ஜூன் 2022, 8:42 am IST
கோப்புப்படம்
பகிர்:

தமிழகத்தில் பொதுத் தேர்வுகள் எழுதாத 6.79 லட்சம் மாணவர்கள் துணைத் தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கக் கோரி முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் முடிவடைந்து விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியுள்ளது.

இந்த பொதுத் தேர்வுகளில், 12ஆம் வகுப்பை சேர்ந்த 1.95 லட்சம், 10ஆம் வகுப்பை சேர்ந்த 2.25 லட்சம், 11ஆம் வகுப்பை சேர்ந்த 2.58 லட்சம் மாணவர்கள் என மொத்தம் 6,79,467 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.

Advertisement

Advertisement

இதையடுத்து, பொதுத் தேர்வில் பங்கேற்காத மாணவர்களை துணைத் தேர்வில் பங்கேற்க வைக்க நடவடிக்கை எடுக்கக் கோரி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments