அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை, 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை உள்பட 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை உள்பட 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இரவு 10 மணிவரை மழைக்கு வாய்ப்புள்ளது. மழை காரணமாக ஓரிரு இடங்களில் தண்ணீர் தேங்குவதோடு போக்குவரத்தும் பாதிக்கப்படலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும்.சுமார் 5.8 கிமீ உயரத்தில் வடக்கு கேரள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவுகிறது.
Advertisement
Advertisement
சுமார் 3.1 கிமீ உயரத்தில் வடக்கு லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை சனிக்கிழமை பெய்யக்கூடும்.
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
அதேசமயம் நாளை(ஞாயிறுக்கிழமை) திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The Meteorological Department has stated that rain is likely in 11 districts, including Chennai, for the next 3 hours.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.