வாணியம்பாடியில் ஆட்டோ கவிழ்ந்து விபத்து: ஓட்டுநர் பலி, 6 பேர் படுகாயம்
வாணியம்பாடியில் ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 6 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.
வாணியம்பாடியில் ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 6 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பெருமாள்பேட்டை பைபாஸ் சாலையில் ஜோலார்பேட்டை அடுத்த காவேரிபட்டு கிராமத்தில் இருந்து மாராப்பட்டு பகுதியில் இயங்கி வரும் தனியார் காலணி தொழிற்சாலையில் பணிபுரியும் பெண் தொழிலாளர்கள் 6 பேர் ஆட்டோவில் சென்றுகொண்டு இருந்தனர். ஆட்டோவை வாணியம்பாடி அம்பூர்பேட்டை பகுதியைச் சேர்ந்த மேகநாதன் (50) என்பவர் ஓட்டி வந்தார்.
ஆட்டோ வாணியம்பாடி பெருமாள் பேட்டை பைபாஸ் சாலை அருகே வந்து கொண்டிருந்தபோது ஆட்டோ ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோ ஓட்டுநர் மேகநாதன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்தில் உயிரிழந்தார். ஆட்டோவில் பயணம் செய்த பெண் தொழிலாளர்கள் மூன்று பேர் பலத்த காயமும் மூன்று பேருக்கு லேசான காயமும் ஏற்பட்டது.
Advertisement
Advertisement
காயமடைந்தவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற நகர போலீசார் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து நகர போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.