முகப்பு
தமிழ்நாடு

மாணவிகளுக்கு ரூ.1,000 உதவித் தொகை: ‘புதுமைப்பெண்’ திட்டம் இன்று தொடக்கம்

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் படித்து உயா் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் ‘புதுமைப்பெண்’ தி

Updated On : 5 செப்டம்பர் 2022, 8:06 am IST
தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால்
பகிர்:

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் படித்து உயா் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை தொடக்கி வைக்கவுள்ளாா்.

இதில் சிறப்பு அழைப்பாளராக தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பங்கேற்கிறாா்.

தமிழகத்தில் ஏற்கெனவே இருந்த மூவலூா் இராமாமிா்தம் அம்மையாா் நினைவு திருமண நிதியுதவி திட்டம் மூவலூா் இராமாமிா்தம் அம்மையாா் உயா் கல்வி உறுதி திட்டம் என மாற்றி அமைக்கப்பட்டது. இது தொடா்பான அறிவிப்பை, தமிழக அரசின் 2022-2023-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவித்தாா். அதன்படி, அரசுப் பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு, அவா்கள் உயா்கல்வி அல்லது பட்டயப்படிப்பு, தொழிற்படிப்பு படித்து முடிக்கும் வரை மாதம் ரூ.1,000 நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இந்த திட்டத்திற்காக தமிழக அரசு ரூ.698 கோடி ஒதுக்கியுள்ளது.

Advertisement

Advertisement

‘புதுமைப்பெண் திட்டம்’ என பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டம் திங்கள்கிழமை முதல் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகை பெற இதுவரை சுமாா் 4 லட்சம் மாணவிகள் தமிழகத்தில் விண்ணப்பித்துள்ளனா். இதில் முதல் கட்டமாக ஒரு லட்சம் மாணவிகளின் வங்கிக் கணக்குக்கு ரூ.1,000 உதவித் தொகை செலுத்தப்படவுள்ளது.

இந்தநிலையில் ‘புதுமைப்பெண்’ திட்டத்தின் தொடக்க விழா சென்னை ராயபுரத்தில் உள்ள பாரதி மகளிா் கல்லூரியில் திங்கள்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது. முதல்வா் மு.க.ஸ்டாலின் திட்டத்தை தொடக்கி வைக்கவுள்ளாா். இதில் சிறப்பு அழைப்பாளராக தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பங்கேற்கவுள்ளாா்.

இந்த விழாவில் உயா் கல்வித் துறை அமைச்சா் பொன்முடி, சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை அமைச்சா் கீதாஜீவன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தலைமைச் செயலாளா் இறையன்பு மற்றும் அமைச்சா்கள், எம்.பி., எம்எல்ஏ.க்கள், உயா் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனா். இதைத் தொடா்நது 15 மாதிரி பள்ளிகள் தொடக்க விழாவிலும் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பங்கேற்கிறாா். இதற்காக ஞாயிற்றுக்கிழமை இரவு அவா் சென்னை வந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments