முகப்பு
தமிழ்நாடு

பாஜகவின் வெறுப்பு அரசியல் படுதோல்வி அடைந்துள்ளது: இரா.முத்தரசன்

பாஜகவின் வெறுப்பு அரசியல் படுதோல்வி அடைந்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால தடை மூலம் ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்பட்டுள்ளது

Updated On : 7 ஆகஸ்ட் 2023, 1:12 pm IST
பகிர்:



பாஜகவின் வெறுப்பு அரசியல் படுதோல்வி அடைந்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால தடை மூலம் ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்பட்டுள்ளது என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர் ராகுல்காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தகுதிநீக்கத்திற்கு உச்சநீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை (ஆக.4) இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து அவர் நாடாளுமன்ற உறுப்பினராக செயல்பட அனுமதிக்க வேண்டும் என நாடு முழுவதும் கோரிக்கை எழுந்தது.

இதனடிப்படையில் ராகுல்காந்தி மீண்டும் வயநாடு நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக செயல்படலாம் என இன்று மக்களவைச் செயலகம் (ஆக 7) அறிவித்திருக்கிறது.

Advertisement

Advertisement

ராகுல் காந்தி மீதான குற்றச்சாட்டை விசாரித்த சூரத் பெருநகர நீதித்துறை நடுவர்மன்றம் மார்ச் 23 ஆம் தேதி வழங்கிய தண்டனை அதீதமானது. உள்நோக்கம் கொண்டது என்பதையும், இந்த தீர்ப்பை எதிர்த்து மாவட்ட அமர்வு நீதிமன்றம் மற்றும் குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி செய்து கொண்ட மேல்முறையீட்டு மனுவிற்கு நேர்மையான முறையில் நியாயம் வழங்கப்படவில்லை என்றும் கருத்துகள் வெளியாகியிருப்பது பாஜக மத்திய அரசின் பழிவாங்கும் அரசியலின் வன்மத்தை வெளிப்படுத்தியுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால தடை மூலம் ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்பட்டுள்ளது. வெறுப்பு அரசியல் படுதோல்வி அடைந்துள்ளது என முத்தரசன் தெரிவத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments