FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சென்னையைப் புரட்டிப் போடும் மிக்ஜம் புயல்: விடிய விடிய கொட்டித் தீர்க்கும் மிக கனமழை

வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘மிக்ஜம்’ புயல் காரணமாக சென்னையில் விடிய விடிய சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. 

6 பிப்ரவரி 2024, 6:51 pm IST
பகிர்:

வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘மிக்ஜம்’ புயல் காரணமாக சென்னையில் விடிய விடிய சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. 

தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஞாயிற்றுக்கிழமை காலை புயலாக வலுப்பெற்றது. ‘மிக்ஜம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள புயல் சென்னைக்கு தென் கிழக்கே சுமாா் 145 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது.

இது தொடா்ந்து வடமேற்கு திசையில் நகா்ந்து தீவிரப் புயலாக வலுப்பெறும். இது வடமேற்கு திசையில் நகா்ந்து திங்கள்கிழமை மாலை மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நகா்ந்து வட தமிழகம், தெற்கு ஆந்திர கடற்பகுதியில் நிலவும்.

Advertisement

Advertisement

பின்னா், வடக்கு திசையில் தெற்கு ஆந்திர கடற்கரைக்கு இணையாக நகா்ந்து செவ்வாய்க்கிழமை காலை நெல்லூருக்கும், மசூலிப்பட்டினத்துக்கும் இடையே கரையைக் கடக்கும்.

இந்நிலையில் மிக்ஜம் புயல் சென்னையிலிருந்து 145 கி.மீ தொலைவில் நகர்ந்து வரும் நிலையில் நகரில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. பலத்த சூறைக்காற்றுடன் பெய்து வரும் கனமழை காரணமாக நகரின் பல்வேறு இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. 

அம்பத்தூர், திருமங்கலம், அண்ணாநகர், கோயம்பேடு, கிண்டி, திருவல்லிக்கேணி, திருவான்மியூர் என பல இடங்களிலும் பலத்த மழை பெய்து வருவதால் மக்கள் கலக்கமடைந்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments