முகப்பு
இந்தியா

தேர்தலில் போட்டியிட வேண்டிய அவசியமில்லை : கரப்பான்பூச்சி ஜனதா கட்சி

அடிப்படை உரிமைகளைக் கோருவதற்காக தேர்தலில் போட்டியிட வேண்டிய அவசியமில்லை கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் தெரிவித்துள்ளது குறித்து...

Updated On : 17 ஜூன் 2026, 9:35 pm IST
அபிஜீத் தீப்கே - பிடிஐ
பகிர்:

அடிப்படை உரிமைகளைக் கோருவதற்காக தேர்தலில் போட்டியிட வேண்டிய அவசியமில்லை என அக்கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே பதில் அளித்துள்ளார்.

நாட்டின் நீட் தேர்வு மோசடி, சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் குளறுபடி போன்றவற்றிற்கு பொறுப்பேற்று மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தலைநகர் தில்லி தொடங்கி, மகாராஷ்டிரம், கர்நாடகம் என பல்வேறு மாநிலங்களில் மத்திய அமைச்சருக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

Advertisement

Advertisement

கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு சமூக வலைதளங்களில் ஆதரவு அதிகரித்த நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையத்தில் கட்சியாக பதிவு செய்து தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களுடன் பேசிய அக்கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கேவிடம், தேர்தலில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போட்டியிடுமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்த அபிஜீத் தீப்கே, நாங்கள் ஏன் தேர்தலில் போட்டியிட வேண்டும். ஒவ்வொருவரும் தங்கள் அடிப்படை உரிமைக்காக தேர்தலில் போட்டியிட்டால் எப்படி? அது நடைமுறைக்கு சரிவராது. அடிப்படை உரிமைகளை கோருவதற்காக தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற அவசியமில்லை எனக் குறிப்பிட்டார்.

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் எனவும் அவர் உறுதிபட தெரிவித்தார்.

citizens should not contest elections just to demand basic rights Cockroach Janta Party founder Abhijeet Dipke

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments