தமிழ்நாடு

இந்த வாரம் பிக் பாஸிலிருந்து வெளியேறிய போட்டியாளர் இவர்தான்!

இந்த வாரம் பிக் பாஸிலிருந்து வெளியேறிய போட்டியாளர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

DIN

இந்த வாரம் பிக் பாஸிலிருந்து வெளியேறிய போட்டியாளர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி 10-வது வாரத்தை எட்டியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து 7-வது முறையாக தொகுத்து வழங்கி வருகிறார். 

பிக் பாஸ் சீசன் 7 விஜய் தொலைக்காட்சியில் அக். 1-ஆம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பிரதீப் ஆண்டனி, ரவீனா தாஹா, வினுஷா தேவி, விஷ்ணு விஜய், மாயா எஸ்.கிருஷ்ணா, விசித்திரா, யுகேந்திரன் வாசுதேவன், பவா செல்லத்துரை, மணி சந்திரா, அனன்யா உள்பட மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

மேலும், போட்டிக்கு இடையே வைல்டுகார்டு போட்டியாளர்களாக அன்னபாரதி, கானா பாலா, அர்ச்சனா, தினேஷ், ஆர்ஜே பிராவோ ஆகிய 5 பேர் களம் இறங்கினர்.

இவர்களில் இருந்து வெளியேற்றப்பட்ட போட்டியாளர்களில் இருந்து இருவர் மீண்டும் வைல்டு கார்டாக பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். சென்ற வாரம் கூல் சுரேஷ் வெளியேறிய நிலையில், இதுவரை 12 பேர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளனர். 

இந்த நிலையில், இந்த வாரம் சரவண விக்ரம், விசித்ரா, ரவீனா ஆகிய மூவர் நாமினேட் செய்யப்பட்டு இருந்தனர்.

குறைந்த வாக்குகள் பெற்றதன் அடிப்படையில், இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சரவண விக்ரம் வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆடிப் பெருக்கு: தாமிரவருணி கரையோரங்களில் சிறப்பு வழிபாடு

ஆடிப் பெருக்கு: தாமிரவருணி கரையோரங்களில் சிறப்பு வழிபாடு

கல்லிடைக்குறிச்சியில் எஸ்டிபிஐ பூத் கமிட்டி கலந்தாய்வுக் கூட்டம்

திசையன்விளையில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்

கால்வாயில் காா் கவிழ்ந்து 11 போ் உயிரிழப்பு; நால்வா் காயம்

SCROLL FOR NEXT