யோகாவை அன்றாட வாழ்வின் ஓர் அங்கமாக மாற்றுவோம்: ராஜ்நாத் சிங்
யோகாவை அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாக மாற்றுவோம் என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தது பற்றி...
யோகாவை அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாக மாற்றுவோம் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) தெரிவித்தார்.
நாடுமுழுவதும் இன்று, சர்வதேச யோகா நாள் மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
மேகாலயா, அப்பர் ஷில்லாங்கில் உள்ள இந்திய விமானப்படையின் மேம்பட்ட தரையிறங்கு தளத்தில் சர்வதேச யோகா நாளைக் கொண்டாடிய ராஜ்நாத் சிங், மக்களுக்கு தன்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
Advertisement
Advertisement
இந்த நிகழ்வில் ராஜ்நாத் சிங் பேசியதாவது:
யோகா என்பது, இந்தியாவின் தொன்மையான அறிவு மரபிலிருந்து உருவானது. இது ஒட்டுமொத்த மனிதகுலத்தின் நலனுக்கு வழிவகுக்கிறது.
ஆரோக்கியமான உடலையும், அமைதியான மனதையும், வலிமையான நாட்டையும் கட்டியெழுப்புவதற்காக, இந்த யோகா தினத்தில், அதை நமது அன்றாட வாழ்வின் ஓர் இன்றியமையாத அங்கமாக மாற்றிக்கொள்ள உறுதியெடுப்போம் என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
Union Defence Minister Rajnath Singh said on Sunday (June 21) that yoga should be made a part of daily life.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.