FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

மனிதர்களின் இரக்கத்துக்கு மாற்றாக அமையாது செய்யறிவு! ராஜ்நாத் சிங்

மனிதர்களின் இரக்கத்துக்கு மாற்றாக செய்யறிவு தொழில்நுட்பம் அமையாது என்று ராஜ்நாத் சிங் பேசியது பற்றி...

Updated On : 13 ஜூலை 2026, 4:51 pm IST
மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் - கோப்புப் படம்
பகிர்:

மனிதர்களின் இரக்க குணத்துக்கு மாற்றாக செய்யறிவு தொழில்நுட்பம் அமையாது என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திங்கள்கிழமை (ஜூலை 13) பேசியுள்ளார்.

லக்னௌவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் 22-வது பட்டமளிப்பு விழாவில் மத்திய அமைச்சர், ராஜ்நாத் சிங் பேசியதாவது:

மருத்துவ அறிவியல் நாளுக்கு நாள் அதிவேகமாக வளர்ந்து வருகிறது. தற்போது செய்யறிவின் காலமாக உள்ளது. மருத்துவத்துறை உள்பட செய்யறிவினால் பாதிக்கப்படாத துறையே இல்லை.

Advertisement

Advertisement

இருப்பினும், ஒரு தாயிடம் சென்று தங்களுடைய குழந்தை விரைவில் குணமடையும் என்று செய்யறிவால் கூற இயலாது. முதியவர்களின் கைகளைப் பிடித்து, “கவலைப்படாதீர்கள்; நாங்கள் எல்லாவற்றையும் சரியாகச் செய்வோம்” என்று செய்யறிவால் சொல்ல முடியாது.

தொழில்நுட்பங்கள் அறிவார்ந்ததாக இருக்கலாம்; ஆனால் இரக்கமுடையதாக இருக்க முடியாது. தொழில்நுட்பங்களால் மருத்துவ அட்டவணைகளைப் படிக்க முடியும்; ஆனால் எந்தச் சூழ்நிலையிலும் நோயாளிகளின் மனநிலையையும் வலியையும் அதனால் புரிந்து கொள்ள முடியாது. எனவே, நீங்கள் இரக்கத்துடன் நடந்துகொள்ள வேண்டும்.

ஒரு உயிரைக் காப்பாற்றுவதே கடமை என்ற உணர்வை நீங்கள் கொண்டிருந்தால், சூழ்நிலைகள் ஒருபோதும் அதற்குத் தடையாக அமையாது என்று ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

summary

Union Defence Minister Rajnath Singh stated on Monday (July 13) that artificial intelligence technology cannot replace human compassion.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments