செய்யறிவுக்கு படைப்புத்திறன் இல்லை; இலக்கியத்தில் அதன் பங்கு பூஜ்ஜியம்! சல்மான் ருஷ்டி
வளர்ந்துவரும் செய்யறிவு தொழில்நுட்பம் குறித்து புகழ்பெற்ற நாவலாசிரியர் சல்மான் ருஷ்டி தெரிவித்தது பற்றி...
வளர்ந்துவரும் செய்யறிவு தொழில்நுட்பம் குறித்து புகழ்பெற்ற எழுத்தாளரான சல்மான் ருஷ்டி கருத்து தெரிவித்துள்ளார்.
என்னதான் செய்யறிவு தொழில்நுட்பங்கள் வளர்ந்தாலும் மனிதனின் சொந்த படைப்புத்திறனால் படைக்கப்படும் படைப்புகளை எந்தவொரு தொழில்நுட்பமும் உருவாக்க இயலாது என்ற கருத்துகள் விவாதிக்கப்பட்டுத்தான் வருகிறது.
இதுகுறித்து புக்கர் விருது பெற்ற எழுத்தாளரான சல்மான் ருஷ்டி லண்டனில் நடைபெற்ற ஒரு விழாவில் பேசியதாவது:
Advertisement
Advertisement
படைக்கும் திறன் இல்லாததால், படைப்புப் பணிகளுக்கு செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படாது. அதனால் செய்யக்கூடியது என்னவென்றால், ஏராளமான தகவல்களை உள்வாங்கி, அவற்றின் வெவ்வேறு வடிவங்களை உருவாக்குவது மட்டுமே.
ஆனால், இதுவரை யாரும் செய்யாத ஒன்றை அதனால் செய்ய முடியாது. மக்கள் இதுவரை செய்யாத விஷயங்களைக் கண்டுபிடிப்பதுதான் கலை. ஆகையால், செய்யறிவில் எனக்கும் துளியும் ஆர்வமில்லை.
கலை என்பது வெறும் பொழுதுபோக்கானது மட்டுமல்ல; அதனை விட மேம்பாடானது. இது ஒரு மிகப்பெரிய சவால். மேலும் நீங்கள் மக்களுக்கு சவால் விடுகிறீர்கள் என்றால் சில சமயங்களில் அது மக்களுக்குப் பிடிக்காமல் போகலாம். ஆனால் அதைச் செய்வதற்கு அதொ ஒரு சவால் என்பதே கூடுதல் காரணமாக அமைகிறது.
ஆகவே படைப்புப் பணிகளில் செய்யறிவின் பங்கை பார்க்கும் போது அது பூஜ்ஜியமாகத்தான் உள்ளது என்று சல்மான் ருஷ்டி குறிப்பிட்டுள்ளார்.
Renowned novelist Salman Rushdie has expressed his views on the emerging technology of artificial intelligence.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.