FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

எதிர்காலத்திலும் போரில் வெற்றிபெற வீரர்களால்தான் முடியும்; செய்யறிவால் அல்ல! ராஜ்நாத் சிங்

எதிர்காலத்திலும் போரில் வெற்றிபெற வீரர்களால்தான் முடியும்; செய்யறிவால் அல்ல என்று ராஜ்நாத் சிங் பேசியுள்ளது பற்றி...

Updated On : 11 ஜூலை 2026, 12:44 pm IST
மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் - கோப்புப் படம்
பகிர்:

எதிர்காலத்திலும் போரில் வெற்றிபெற வீரர்களால்தான் முடியும்; செய்யறிவால் அல்ல என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சனிக்கிழமை (ஜூலை 11) பேசியுள்ளார்.

ஆந்திரப் பிரதேசம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ஐஎன்எஸ் மகேந்திரகிரி போர்க்கப்பலை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழாவில் ராஜ்நாத் சிங் உரையாற்றினார்.

இந்த விழாவில் ராணுவம் மற்றும் செய்யறிவு குறித்து அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:

Advertisement

Advertisement

இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் விண்வெளி உற்பத்தியில் ஆந்திரப் பிரதேசம் வலிமையான இடத்தைப் பிடித்துள்ளது.

எதிர்காலத்தில் நிகழப்போகும் போர்களை செய்யறிவு போன்ற தொழில்நுட்பங்கள் வடிவமைத்தாலும், நன்கு பயிற்சி பெற்ற வீரர்கள் மற்றும் ராணுவத்தின் வலிமை மூலமாகவே போரில் வெற்றி பெற முடியும்.

ஆகவே, புதிய தொழில்நுட்பங்களும் தற்போதுள்ள ராணுவமும் ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல. மாறாக அவை ஒன்றுக்கொன்று துணைபுரிகின்றன. ராணுவ வீரர்கள் இல்லாத, புதிய தொழில்நுட்பங்கள் முழுமையற்றவையாக இருக்கும் என்று ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

summary

Defence Minister Rajnath Singh stated on Saturday (July 11) that even in the future, it is soldiers not artificial intelligence who will be able to win wars.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments