நான் இந்திய அணியில் இடம்பெற இவர்கள்தான் காரணம்; மனம் திறந்த பிரப்சிம்ரன் சிங்!
தான் இந்திய அணியில் இடம்பெறுவதற்கு யார் காரணம் என்பது குறித்து பிரப்சிம்ரன் சிங் மனம் திறந்துள்ளார்.
தான் இந்திய அணியில் இடம்பெறுவதற்கு யார் காரணம் என்பது குறித்து பிரப்சிம்ரன் சிங் மனம் திறந்துள்ளார்.
இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இங்கிலாந்து சுற்றுப்பயணம் நிறைவடைந்தவுடன் இந்திய அணி ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடுகிறது.
ஜிம்பாப்வேவுக்கு எதிரான இந்த டி20 தொடருக்கான இந்திய அணியில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிரப்சிம்ரன் சிம்ரன் சிங் இடம்பெற்றுள்ளார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், தான் இந்திய அணியில் இடம்பெறுவதற்கு யார் காரணம் என்பது குறித்து பிரப்சிம்ரன் சிங் மனம் திறந்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: உங்களது வாழ்க்கையில் ஒரு விஷயத்துக்காக கடுமையாக உழைக்கிறீர்கள் என்றால், உங்களது உழைப்புக்கான பலன் கிடைக்கும்போது சிறப்பாக உணர்வீர்கள். ஆசிய போட்டிக்கான அணியில் இடம்பெற்ற அனுபவம் சிறப்பாக இருந்தது. ஆனால், அப்போது அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.
தற்போது இந்திய அணிக்காக விளையாடவுள்ளது மிகுந்த உற்சாகமளிக்கிறது. ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடும்போது, அணியில் இடம்பெற்று விளையாடாமல் திரும்பி வருவதை நான் விரும்பவில்லை. எனக்கு வாய்ப்பு கிடைத்தால், என்னுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவேன்.
ஐபிஎல் தொடர் நிறைவடைந்த பிறகு, யுவராஜ் சிங்குடன் கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபடவில்லை. ஆனால், இந்திய அணிக்கு தேர்வானவுடன் யுவராஜ் சிங்குக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு நீண்ட நேரம் பேசினேன். அவருடைய அனுபவங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டார். என்னுடைய வெற்றிக்கு ரிக்கி பாண்டிங்கும் மிகப் பெரிய பங்களிப்பை வழங்கியுள்ளார். பஞ்சாப் கிங்ஸ் அணியில் என்னை தக்கவைத்ததில் அவருடைய பங்களிப்பும் உள்ளது. என்னுடைய வெற்றியில் யுவராஜ் சிங், ரிக்கி பாண்டிங் இருவரும் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளனர். அவர்கள் இருவருக்கும் நன்றி கூற கடமைப் பட்டிருக்கிறேன் என்றார்.
பஞ்சாப் கிங்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் மற்றும் தொடக்க ஆட்டக்காரரான பிரப்சிம்ரன் சிங் கடந்த இரண்டு சீசன்களாக அந்த அணிக்காக 500 ரன்களுக்கும் அதிகமாக குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Prabhsimran Singh has opened up about who is responsible for his inclusion in the Indian team.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.