தில்லி கேபிடல்ஸின் பயிற்சியாளராகும் யுவராஜ் சிங்!
அடுத்த ஆண்டு ஐபிஎல் சீசனில் தில்லி கேபிடல்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் செயல்படவுள்ளார்.
அடுத்த ஆண்டு ஐபிஎல் சீசனில் தில்லி கேபிடல்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் செயல்படவுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் வீரரான யுவராஜ் சிங், கடந்த 2007 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியிலும், 2011 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியிலும் இடம்பெற்றார். இந்திய அணியில் இடம்பெற்று விளையாடி வரும் பல இளம் வீரர்களுக்கு அவர் ஆலோசனைகளை வழங்கி உதவி வருகிறார்.
இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக் சர்மா ஆகியோருக்கு தனிப்பட்ட முறையில் யுவராஜ் சிங் ஆலோசகராக செயல்பட்டு பயிற்சியளித்துள்ளார். இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்டரான ரிஷப் பந்த் மோசமான ஃபார்மில் இருந்தபோது, யுவராஜ் சிங்கிடம் ஆலோசனைகளைப் பெற்று மீண்டும் ஃபார்முக்குத் திரும்பியதாக கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இளம் வீரர்கள் பலருக்கும் ஆலோசகராக செயல்பட்டு வந்த யுவராஜ் சிங் தற்போது தில்லி கேபிடல்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக செயல்படவுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இதுவரை ஐபிஎல் தொடரில் 132 போட்டிகளில் விளையாடியுள்ள யுவராஜ் சிங், முதல் முறையாக பயிற்சியாளராக செயல்படவுள்ளார்.
இது தொடர்பாக ஐபிஎல் தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஐபிஎல் 2027-28 ஆம் ஆண்டுக்கான தில்லி கேபிடல்ஸ் அணியின் பயிற்சியாளர்கள் குழு முழுமையாக மாற்றியமைக்கப்படவுள்ளது. தற்போது உள்ள பயிற்சியாளர்கள் குழுவுக்குப் பதிலாக புதிய குழு நியமிக்கப்படவுள்ளது. தில்லி கேபிடல்ஸ் அணியின் இயக்குநராக சௌரவ் கங்குலி நியமிக்கப்படவுள்ளார். பேட்டிங் பயிற்சியாளராக யுவராஜ் சிங் இணையவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் லக்னௌ அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய ரிஷப் பந்த், டிரேடிங் முறை மூலம் தில்லி கேபிடல்ஸ் அணியுடன் மீண்டும் இணைய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
Former Indian player Yuvraj Singh will serve as the batting coach for the Delhi Capitals in next year's IPL season.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.