முகப்பு
கிரிக்கெட்

மீண்டும் தில்லி கேபிடல்ஸில் இணைந்த ரிஷப் பந்த்! காரணம் என்ன?

ஐபிஎல் தொடரில் கடந்த இரண்டு சீசன்களாக லக்னௌ அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ரிஷப் பந்த் மீண்டும் தில்லி கேபிடல்ஸில் இணைந்துள்ளார்.

Updated On : 23 ஜூன் 2026, 3:11 pm IST
ரிஷப் பந்த் - படம் | லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் (எக்ஸ்)
பகிர்:

ஐபிஎல் தொடரில் கடந்த இரண்டு சீசன்களாக லக்னௌ அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ரிஷப் பந்த் மீண்டும் தில்லி கேபிடல்ஸில் இணைந்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் கடந்த 2016 மற்றும் 2024 ஆம் ஆண்டு இடைவெளியில் தில்லி கேபிடல்ஸ் அணிக்காக ரிஷப் பந்த் விளையாடியிருந்தார். தில்லி கேபிடல்ஸ் அணிக்காக 111 போட்டிகளில் விளையாடியுள்ள ரிஷப் பந்த், 2021 மற்றும் 2024 ஆம் ஆண்டு இடைவெளியில் அந்த அணியின் கேப்டனாக செயல்பட்டுள்ளார்.

கடந்த 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்குப் பிறகு தில்லி கேபிடல்ஸ் அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட ரிஷப் பந்த், ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்றார். அவரை லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ரூ. 27 கோடிக்கு ஏலத்தில் எடுத்து, அந்த அணியின் கேப்டனாக அவரை நியமித்தது.

Advertisement

Advertisement

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாகவும், ஒரு விக்கெட் கீப்பர் பேட்டராகவும் முதல் சீசன் அவருக்கு சிறப்பாக அமையவில்லை. அவர் மிகவும் சராசரியாக விளையாடினார். கடந்த ஐபிஎல் சீசனில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 7-வது இடம் பிடித்தது. லக்னௌ அணியின் கேப்டனாக முதல் சீசனை விட இரண்டாவது சீசன் ரிஷப் பந்த்துக்கு மிகவும் மோசமாக அமைந்தது.

இந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் ரிஷப் பந்த் தலைமையிலான லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி மிகவும் மோசமாக விளையாடியது. 14 ஆட்டங்களில் வெறும் 4 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்தது.

கேப்டனாக மட்டுமின்றி ஒரு பேட்டராகவும் இந்த சீசன் ரிஷப் பந்த்துக்கு சரியாக அமையவில்லை. கடந்த சீசனில் 14 போட்டிகளில் 269 ரன்கள் எடுத்த ரிஷப் பந்த், இந்த சீசனில் 312 ரன்கள் எடுத்தார்.

மீண்டும் தில்லி கேபிடல்ஸில் ரிஷப் பந்த்!

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் சிறப்பாக செயல்படத் தவறிய ரிஷப் பந்த், டிரேடிங் முறை மூலம் தனது பழைய அணியான தில்லி கேபிடல்ஸுடன் மீண்டும் இணைந்துள்ளார்.

லக்னௌ அணியால் ரூ. 27 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட ரிஷப் பந்த், தில்லி கேபிடல்ஸ் அணியால் ரூ. 15 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக தில்லி கேபிடல்ஸ் அணியிலிருந்து ரூ.13.50 கோடிக்கு லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் குல்தீப் யாதவ் இணைந்துள்ளார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸிலிருந்து கடந்த 2022 ஆம் ஆண்டு குல்தீப் யாதவ் தில்லி கேபிடல்ஸ் அணியில் இணைந்தார். இதுவரை தில்லி கேபிடல்ஸ் அணிக்காக 65 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 72 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

அண்மையில் நிறைவடைந்த ஐபிஎல் சீசனில் குல்தீப் யாதவ் 14 போட்டிகளில் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

summary

Rishabh Pant, who served as the captain of the Lucknow team for the past two IPL seasons, has rejoined the Delhi Capitals.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments