இந்திய டி20 அணியில் தேர்வாகாத முன்னாள் கேப்டன் சூர்யகுமார் புதிய அணிக்கு வாழ்த்து!
இந்திய டி20 அணியில் தேர்வாகாத முன்னாள் கேப்டன் சூர்யகுமார் குறித்து...
இந்திய டி20 அணியில் தேர்வாகாத முன்னாள் கேப்டனும் உலகக் கோப்பையை வென்றவருமான சூர்யகுமார் யாதவ் புதிய அணிக்கு தனது வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து, அயர்லாந்து, ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய டி20 அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் எதிலுமே முன்னாள் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தேர்வாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பையைச் சேர்ந்த சூர்யகுமார் யாதவ் (35 வயது) இதுவரை 113 டி20 போட்டிகளில் 3,272 ரன்கள் குவித்துள்ளார். 179 ஐபிஎல் போட்டிகளில் 4, 581ரன்களைக் குவித்துள்ளார்.
Advertisement
Advertisement
சமீபத்தில் இந்திய அணி, ஐபிஎல் தொடர் இரண்டிலுமே ஃபார்மில் இல்லாததால் ரன்களைக் குவிக்க முடியாமல் சூர்யகுமார் தடுமாறி வருகிறார். இந்த நிலையில், புதிய கேப்டனாக ஷரேயாஸ் ஐயர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சூர்யகுமார் யாதவ் இந்திய அணியில் இருந்தே நீக்கப்பட்டுள்ளார். அடுத்த டி20 உலகக் கோப்பைக்காக இப்போதிருந்தே தயாராக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தேர்வுக்குழுவினர் கூறியுள்ளார்கள்.
இந்திய அணியில் தான் தேர்வாகாவிட்டாலும் புதிய அணிக்கு சூர்யகுமார் யாதவ் வாழ்த்து கூறியுள்ளார். அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், “புதிய சவால்கள் காத்திருக்கையில், அதிக திறமை வாய்ந்த இந்த அணிக்கு எனது வாழ்த்துகள்” எனக் கூறியுள்ளார்.
Former captain Suryakumar, who was not selected for the Indian T20 squad, extends his best wishes to the new team!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.