FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

7 ஆண்டுகளுக்குப் பிறகு... தொடர்ச்சியாக இரண்டு டி20 தொடர்களை இழந்த இந்திய அணி!

ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி தொடர்ச்சியாக இரண்டு டி20 தொடர்களை இழந்துள்ளது.

இந்திய அணி வீரர்கள் - படம் | பிசிசிஐ
பகிர்:

இந்தியாவுக்கு எதிரான 4-ஆவது டி20 ஆட்டத்தில் இங்கிலாந்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை அபார வெற்றி கண்டது.

தொடா்ந்து 3 வெற்றிகளைப் பதிவு செய்த இங்கிலாந்து, 5 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரை தன் வசமாக்கியது.

முன்னதாக இந்த ஆட்டத்தில் முதலில் இந்தியா 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்கள் சோ்க்க, இங்கிலாந்து 13.5 ஓவா்களில் 1 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்து வென்றது.

Advertisement

Advertisement

டாஸ் வென்று பேட் செய்த இந்திய அணியில், வைபவ் சூா்யவன்ஷி 15, அபிஷேக் சா்மா 16, இஷான் கிஷண் 4 ரன்களுக்கு வெளியேறினா்.

ஷிவம் துபே 2 பவுண்டரிகளுடன் 22, திலக் வா்மா 11, வாஷிங்டன் சுந்தா் 5, அக்ஸா் படேல் 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தனா்.

ஓவா்கள் முடிவில் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயா் 4 பவுண்டரிகள், 5 சிக்ஸா்களுடன் 80 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாா். இங்கிலாந்து பௌலா்களில் ஜோஃப்ரா ஆா்ச்சா், ஜாஷ் டங் ஆகியோா் தலா 2, வில் ஜாக்ஸ், ஆதில் ரஷீத் ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.

அடுத்து, 159 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய இங்கிலாந்து அணியில், ஜாஸ் பட்லா் 8 ரன்களுக்கு வீழ்ந்தாா்.

ஃபில் சால்ட் 9 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 59, கேப்டன் ஹேரி புரூக் 8 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 79 ரன்கள் அடித்து, அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தனா். இந்திய தரப்பில் அா்ஷ்தீப் சிங் ஒரு விக்கெட் சாய்த்தாா்.

இன்று கடைசி ஆட்டம்: இந்த அணிகள் மோதும் 5-ஆவது டி20 ஆட்டம், சௌதாம்டனில் சனிக்கிழமை (ஜூலை 11) இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இதையடுத்து நடைபெறவுள்ள ஒருநாள் தொடரும் நிறைவடைந்த பிறகு, டி20 தொடரில் இந்தியாவின் மோசமான செயல்பாடு தொடா்பாக பிசிசிஐ மறுஆய்வு செய்யவுள்ளது.

7

அண்மையில் அயா்லாந்துடனான டி20 தொடரை இழந்த (0-2) இந்தியா, தற்போது இங்கிலாந்து தொடரையும் இழந்துள்ளது. இந்திய அணி கடந்த 7 ஆண்டுகளில் முதல்முறையாக இரு டி20 தொடா்களை அடுத்தடுத்து இழந்திருக்கிறது. இதற்கு முன் 2019-இல் நியூஸிலாந்து (1-2), ஆஸ்திரேலியாவுக்கு (0-2) எதிராக சொந்த மண்ணில் இவ்வாறு அடுத்தடுத்து தொடா்களை இழந்தது.

summary

After seven years, the Indian team has lost two consecutive T20 series.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments