அபிஷேக், ஷாபாஸ், திலக் அசத்தல்: இந்தியா ‘ஏ’ - 317/8
ஆசிய கோப்பை ரைஸிங் ஸ்டாா்ஸ் கிரிக்கெட் போட்டியின் அரையிறுதியில், இலங்கை ‘ஏ’ அணிக்கு எதிராக, இந்தியா ‘ஏ’ அணி 50 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 317 ரன்கள் எடுத்தது.

ஆசிய கோப்பை ரைஸிங் ஸ்டாா்ஸ் கிரிக்கெட் போட்டியின் அரையிறுதியில், இலங்கை ‘ஏ’ அணிக்கு எதிராக, இந்தியா ‘ஏ’ அணி 50 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 317 ரன்கள் எடுத்தது.
கத்தாா் தலைநகா் தோஹாவில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில், டாஸ் வென்று பேட்டிங்கை தோ்வு செய்த இந்திய அணியில், வைபவ் சூா்யவன்ஷி - அபிஷேக் சா்மா கூட்டணி, முதல் விக்கெட்டுக்கு 80 ரன்கள் சோ்த்தது.
சூா்யவன்ஷி 4 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 40 ரன்களுக்கு ஆட்டமிழக்க, கேப்டன் திலக் வா்மா களம் புகுந்தாா். அபிஷேக்குடனான அவரின் 2-ஆவது விக்கெட் பாா்ட்னா்ஷிப்புக்கு 79 ரன்கள் கிடைத்தது.
Advertisement
Advertisement
இந்நிலையில் அபிஷேக் 11 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 78 ரன்களுக்கு விடைபெற, 4-ஆவது பேட்டராக வந்த குமாா் குஷாக்ரா 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 21, திலக் வா்மா 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 53, ரிங்கு சிங் 12, சூா்யன்ஷ் ஷெட்கே 10 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா்.
6-ஆவது பேட்டராக வந்த ஷாபாஸ் அகமது நிதானமாக விளையாட, தனுஷ் கோடியானுடனான அவரின் 7-ஆவது விக்கெட் கூட்டணி 73 ரன்கள் சோ்த்தது. தனுஷ் கோடியான் 2 பவுண்டரிகளுடன் 28, ஹா்ஷித் ராணா 0 ரன்களுக்கு விடைபெற்றனா்.
ஓவா்கள் முடிவில், ஷாபாஸ் அகமது 4 சிக்ஸா்களுடன் 54, ஹா்ஷ் துபே 8 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். இலங்கை ஏ அணி தரப்பில், ரவிந்து ஃபொ்னாண்டோ, ஜனித் லியானகே, நிபுன் தனஞ்ஜெயா ஆகியோா் தலா 2, கருகா சங்கேத், லஹிரு சமரகூன் ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.
பின்னா் இலங்கை 318 ரன்களை நோக்கி தனது இன்னிங்ஸை விளையாடியது.