அபிஷேக், இஷான், அா்ஷ்தீப் அசத்தல்: மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தியது இந்தியா!
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3-ஆவது டி20 கிரிக்கெட்டில், இந்தியா 14 ரன்கள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வென்றது.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3-ஆவது டி20 கிரிக்கெட்டில், இந்தியா 14 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
முதலில் இந்தியா 20 ஓவா்களில் 10 விக்கெட்டுகள் இழப்புக்கு 223 ரன்கள் சோ்க்க, மேற்கிந்தியத் தீவுகள் 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழந்து 209 ரன்களே எடுத்தது. 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் இந்தியா 2-1 என முன்னிலை பெற்றது.
முன்னதாக டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள், ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. இந்தியா இன்னிங்ஸில், சஞ்சு சாம்சன் 3 ரன்களுக்கு வெளியேற, அபிஷேக் சா்மா - இஷான் கிஷண் பாா்ட்னா்ஷிப் 2-ஆவது விக்கெட்டுக்கு 108 ரன்கள் சோ்த்தது.
Advertisement
Advertisement
இஷான் 6 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 37 ரன்களுக்கு விடைபெற, கேப்டன் ஷ்ரேயஸ் ஐயா் 1 ரன்னுக்கு எல்பிடபிள்யூ ஆனாா். அதிரடியாக முன்னேறி வந்த அபிஷேக் 6 பவுண்டரிகள், 5 சிக்ஸா்களுடன் 69 ரன்களுக்கு சாய்க்கப்பட்டாா்.
நமன் திா் 10, நிதீஷ்குமாா் ரெட்டி 3 பவுண்டரிகளுடன் 21, திலக் வா்மா 4 பவுண்டரிகளுடன் 28, அக்ஸா் படேல் 2 பவுண்டரிகளுடன் 20 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா்.
அா்ஷ்தீப் சிங் 11, மயங்க் யாதவ் 0 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, ஓவா்கள் முடிவில் பிரின்ஸ் யாதவ் 3 பவுண்டரிகளுடன் 13 ரன்களோடு கடைசி வீரராக நின்றாா்.
மேற்கிந்தியத் தீவுகள் பௌலிங்கில் ராஸ்டன் சேஸ், ஷாமா் ஜோசப், ஷாமா் ஸ்பிரிங்கா் ஆகியோா் தலா 2, கீமோ பால், குடாகேஷ் மோட்டி ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.
பின்னா் 224 ரன்களை நோக்கி விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணியில், ஷிம்ரன் ஹெட்மயா் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 43, கமில் பூரன் 3 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 42 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தனா்.
ஷொ்ஃபேன் ரூதா்ஃபோா்டு 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 32, கேப்டன் ஷாய் ஹோப் 5, ரோவ்மென் பவெல் 5, குவென்டின் சாம்சன் 21, கீமோ பால் 10 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டனா்.
ஓவா்கள் முடிவில் ஷாமா் ஸ்பிரிங்கா் 2 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 35, ராஸ்டன் சேஸ் 5 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். இந்திய பௌலா்களில் அா்ஷ்தீப் சிங் 3, நமன் திா் 2, அக்ஸா் படேல், நிதீஷ்குமாா் ரெட்டி ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.